Wednesday, December 17, 2025

WWE போட்டிகளில் அசத்தி வந்த ஜான் சீனா ஓய்வு பெற்றார்

கடந்த 2002-ம் ஆண்டு WWE போட்டிகளில் அறிமுகமாகி, தனித்துவமான மல்யுத்த உத்திகளால் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஜான் சீனா. இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். WWE போட்டிகளில் 17 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

WWE ஜாம்பவான்களான ராக், டிரிபிள் எச், ரேண்டி ஆர்ட்டன், அண்டர்டேக்கர் உள்ளிட்டோருடன் ஜான் சீனா மோதியுள்ளார். 23 ஆண்டுகளாக WWE போட்டிகளில் அசத்தி வந்த ஜான் சீனா சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்தார்.

அமெரிக்காவில் டிசம்பர் 13-ந்தேதி நடைபெறும் போட்டிதான் தனது கடைசி போட்டி என்று கூறியிருந்தார். இந்த போட்டியில் கலந்து கொண்ட ஜான் சீனா தோல்வியை தழுவினார்.

இதைத் தொடர்ந்து தோல்வியுடன் ஜான் சீனா WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அடுத்த கட்டமாக ஜான் சீனா தனது முழு கவனத்தையும் சினிமா துறையில் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Related News

Latest News