கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிப்பு

கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு, இலக்கியத் துறையில் வழங்கப்படும் மிகச் சிறந்த ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கியத் துறையில் இதுவரை 1975ஆம் ஆண்டு எழுத்தாளர் அகிலன், 2002ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகிய இரண்டு பேர் மட்டுமே ஞானபீட விருது பெற்றிருக்கிறார்கள். தற்போது தமிழகத்திலிருந்து மூன்றாவது கவிஞராக ஞானபீட விருதினை வைரமுத்து பெறுகிறார்.

இலக்கியத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்திருக்கும் வைரமுத்துவுக்கு, நாட்டின் இலக்கியத் துறையில், மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

கவிஞர் வைரமுத்து, கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற இலக்கியப் படைப்புக்காக சாகித்திய அகாதெமி விருதினையும் மிக உயர்ந்த இலக்கிய விருதுகளில் ஒன்றான சாதனா சம்மான் என்ற விருதினையும் பெற்றுள்ளார். மேலும், இலக்கியத்தில் கலைஞர்களின் பங்களிப்புக்காக மத்திய அரசு வழங்கும் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் விருதுகளையும் கவிஞர் வைரமுத்து பெற்றிருக்கிறார்.

Related News

Latest News