Wednesday, March 12, 2025

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் அதிவேக இன்டர்நெட்

இந்தியாவில் ஜியோ நிறுவனம் மூலம், ஸ்பேஸ் எக்ஸ்ஸின் ஸ்டார்லிங்க் பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம், கிராமப்புறங்கள் மற்றும் தொலை தூரங்களில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா சிறந்த இணைய சேவை கிடைக்கும்.

உலக பணக்காரர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஜியோ ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் மூலம் அதிவேக இன்டர்நெட் சேவை கிடைக்கும். ஸ்டார்லிங்க், ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர் ஃபைபருடன் இணைந்து விரைவாகவும், குறைந்த விலையிலும் நெட்வொர்க் சேவைகளை வழங்க உள்ளது.

ஒவ்வொரு இந்தியரும், அவர்கள் எந்த பகுதியில் வசித்தாலும் சரி, அவர்களுக்கு குறைந்த விலையில், அதிவேக பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்குவதே ஜியோவின் குறிக்கோள் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மேத்யூ ஓமன் தெரிவித்துள்ளார்.

Latest news