Thursday, February 5, 2026

பிரான்ஸ் பிரதமராக ஜெபஸ்டின் மீண்டும் நியமனம்

பிரான்ஸ் நாட்டின் அதிபராக இம்மானுவேல் மேக்ரான் உள்ள நிலையில், அரசியல் குழப்பம் காரணமாக கடந்த ஓராண்டில் பிரதமராக நியமிக்கப்பட்ட 4 பேர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் மேக்ரான் தலைமையிலான அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில், தனது ஆதரவாளரான ஜெபஸ்டின் லெகோர்னுவை பிரதமராக இம்மானுவேல் மேக்ரான் அறிவித்தார். ஆனால், பதவியேற்ற 27 நாட்களில் ஜெபஸ்டின் லெகோர்னு பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், பிரான்சின் பிரதமராக ஜெபஸ்டின் லெகோர்னு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய அமைச்சரவையை நியமித்து, நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்யுமாறும் ஜெபஸ்டினிடம், இம்மானுவேல் மேக்ரான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related News

Latest News