ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் தான் அவரின் கடைசி படமாகும். தீவிர அரசியலில் இறங்குவதால் இந்த படத்துடன் சினிமாவுக்கு விஜய் முழுக்கு போடுகிறார்.
அரசியல் பின்னணியை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில், விஜய்யுடன் இணைந்து மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், கவுதம் மேனன், ப்ரியாமணி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று மாலை 6 மணிக்கு ஜனநாயகன் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிடுவதாக KVN புரொடக்சன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் தளபதி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.
அந்தவகையில் விஜய்யின் கடைசி ஆட்டமான ‘ஜனநாயகன்’, 2026ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறதாம். முன்னதாக 2025ம் ஆண்டு தீபாவளிக்கு பத்ம வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில், கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால், பொங்கலுக்கு ரிலீஸ் தேதி தள்ளிப்போய் இருப்பதாகக் தெரிகிறது.
எது எப்படியோ தளபதி ரசிகர்கள் தற்போது ‘கொளுத்துங்கடா பட்டாச’ மோடில், செம ஜாலியாக சமூக வலைதளங்களில் Vibe செய்து வருகின்றனர். ஜனநாயகன் படத்தின் OTT உரிமையை, Netflix நிறுவனம் சுமார் 80 கோடி ரூபாய்க்கு தட்டித் தூக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.