எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘ஜனநாயகன்’. இந்த படம் 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று திரைக்கு வர உள்ளது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார்.
‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் டிசம்பர் மாதம், 27ம் தேதி மலேசியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விழாவுக்கு மலேசியா அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
முழுக்க முழுக்க சினிமா சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும். யாரும் அரசியல் பேச கூடாது. ரசிகர்கள் கட்சி கொடி, டி-சர்ட், துண்டு அணிந்து வரக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை என மலேசிய அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
