சரியான நேரத்தில் ‘ஜன நாயகன்’ வெளியாகும்- பூஜா ஹெக்டே…

‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் வெளியானது தொடர்பாக பலரும் தங்களது கண்டனங்களையும், படக்குழுவுக்கு ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்த நடிகை பூஜா ஹெக்டே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஒரு திரைப்படம் என்பது, எண்ணற்ற மணிநேர உழைப்பு, படைப்பு சார்ந்த துணிச்சலான முயற்சிகள், தனிப்பட்ட தியாகங்கள் மற்றும் உங்களுக்குச் சாத்தியமான மிகச்சிறந்த அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளும் தவறாமல் களத்தில் நின்ற ஒரு குழுவின் கூட்டு முயற்சியின் விளைவாகும்…

எங்கள் திரைப்படம் இணையத்தில் கசிந்திருப்பதைப் பார்ப்பது, எனக்கு மட்டுமல்லாமல், இத்திரைப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞரும் தொழில்நுட்பக் கலைஞரும் தங்களுக்கு உரித்தான மரியாதையை இழக்க நேரிடுகிறதே என்பது குறித்த கவலையாகும்……

மேலும், விஜய் சாரின் கடைசிப் படத்தை, ‘கடைசி முறையாக’, பெரிய திரையில், உரிய முறையில் ஒன்றாகக் கூடி நின்று கொண்டாடி ரசிக்கும் உரிமை நம் அனைவருக்கும் இல்லையா?…

எனவே, நாம் இப்படத்தை உரிய முறையிலேயே காண்போம்… சற்றுப் பொறுத்திருப்போம். சரியான நேரத்தில் இப்படம் வெளியாகும்….

Related News

Latest News