இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் திரைப்படம் உருவாகியுள்ளது. நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக இது இருக்குமெனக் கூறப்படுவதால், மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, கௌதம் மேனன், பிரியாமணி உள்பட பலர் நடித்துள்ளார்கள்.
வெளிநாட்டில் இதற்கான முன்பதிவுகள் தொடங்கிய நிலையில், பிரிட்டனில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.
லியோ திரைப்படத்துக்கு ஒரே நாளில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையான நிலையில், ஜன நாயகன் 12,700 டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது.
