தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தேதிகளை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வரும் 15ஆம் தேதியும்,பாலமேட்டில் 16ஆம் தேதியும், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவது குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறக்கூடிய அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெறுகிறது.
இதில் அமைச்சர் மூர்த்தி, மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் மற்றும் கால்நடைத்துறை மண்டனை மண்டல இயக்குனர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
