ஜல் ஜீவன் திட்டம் முறையாக செயல்படுத்தவில்லை என அண்ணாமலை தவறான தகவலை கூறி வருகிறார் என்றும், சந்தேகம் இருந்தால் அவர் நேரில் வந்து பார்வையிடட்டும் என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் அருகே உள்ள கல்குளத்தில் சுற்றுச்சாலையில் 96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டாம் கட்ட பணியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி துவக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் 10 ஆயிரம் இடங்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது என்றும், சிவகங்கை மாவட்டத்தில் 250 முகாம்களில் நடத்த திட்டமிடப்பட்டு நாள்தோறும் 6 முகாம்கள் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
ஜல் ஜீவன் திட்டம் முறையாக செயல்படுத்தவில்லை என அண்ணாமலை தவறான தகவலை கூறி வருகிறார் என்றும் அவருக்கு சந்தேகம் இருந்தால், அவர் நேரில் வந்து பார்வையிடட்டும், எனவும் அண்ணாமலையின் அறிக்கை மக்களிடையே பீதியை கிளப்புவதாக உள்ளது என்றும் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் குற்றம்சாட்டினார்.