Tuesday, April 22, 2025

தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ-ஜியோ, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (மார்ச் 23) மாநிலம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. சென்னையில் சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பங்கேற்றனர்.

இதேபோல், திருநெல்வேலி, சேலம், திருச்சி, நாமக்கல், மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: பட்ஜெட் அறிவிப்பில், எங்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமானது. எங்கள் கோரிக்கைகள் கேள்விக்குறியானது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Latest news