19-வது IPL. கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கவுள்ளது.
அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும்.
இந்த நிலையில் தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த சஞ்சு சாம்சனை சென்னை அணி டிரேட் முறையில் வாங்க உள்ளதாக பல தகவல்கள் வந்த நிலையில் இன்று { 15.11.2025 } அதிகாரப்பூர்வ அறிவிப்பை CSK நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதாவது, சென்னை அணியில் விளையாடிய ஜடேஜா, சாம் கரனை ராஜஸ்தான் அணிக்கு கொடுத்து ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்ட சஞ்சு சாம்சனை CSK அணி வாங்கியுள்ளது.
CSK வில் சாம் கரனை இருப்பதை கண்டு ரசிகர்கள் கொண்டாடுகின்றனர், ஆனால் ஒருபுறம் நட்சத்திர வீரர் ஜடேஜா இல்லாததை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.
CSK- வில் ஜடேஜா கடந்து வந்த பாதைகளை நினைவு கூறும் வகையில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது.
அதில்
மஞ்சள் ராஜ்ஜியத்தைக் காத்த வாள்.
வீரர்கள் இருக்கிறார்கள்
பாதுகாவலர்களும் இருக்கிறார்கள்.
இவர் இரண்டும் சேர்ந்த கலவை தான்.
இன்று, நன்றியுடன் தலைவணங்குகிறோம்.
முடிவுகளுக்கு.
திருப்புமுனை மந்திரங்களுக்கு.
எப்போதும் எங்கள் ராஜா.
எப்போதும் எங்கள் தளபதி.
எப்போதும் எங்கள் Jaddu! என்று பதிவிட்டுள்ளார்.
