தொடர்ந்து 30 ஆண்டுகளாக ஒரே நம்பரில் லாட்டரிச்
சீட்டு வாங்கியவருக்கு அண்மையில் திடீர் அதிர்ஷ்டம் அடித்தது.
136 கோடிக்கும் அதிகமான பரிசுத் தொகையைப் பெறவுள்ளார்
அந்த அதிர்ஷ்டசாலி. எனினும் அவரின் பெயர் வெளியிடப்படவில்லை.
61 வயதான அமெரிக்காவைச் சேர்ந்த அந்த
திடீர் கோடீஸ்வரர் மிக்ஸிகன் நகரில் வசித்துவருகிறார்.
அவர் ஒரு விநோத வழக்கமாகத் தொடர்ந்து
ஒரே எண்ணில் லாட்டரிச் சீட்டை வாங்கிவந்தார்….
தொடர்ந்து 30 ஆண்டுகளாக பரிசுச் சீட்டை வாங்கிவரும்
அவருக்கு ஒருமுறைகூட அவருக்குப் பரிசு விழுந்ததில்லை.
ஆனாலும், பொறுமையோடு இருந்தார்.
அந்தப் பொறுமைக்குத் தற்போது 18. 41 அமெரிக்க டாலர் பரிசு கிடைத்துள்ளது.
இதுபற்றிக் கூறியுள்ள அவர், ”1991 முதல் பரிசு
செட்டுகளை வாங்கிக்கொண்டிருந்தேன். வெற்றி எனக்கு
விதிக்கப்படவில்லை. நானும் பலமுறை எண்ணை மாற்றுவது
பற்றி யோசித்தேன். ஆனாலும், பிடிவாதமாக இந்த
எண்கொண்ட லாட்டரி செட்டுகளையே வாங்கிவந்தேன்” என்று தெரிவித்துள்ளார்
இந்தப் பரிசுத் தொகையின் இந்திய மதிப்பு
136 கோடியே 48 லட்சத்து 77 ஆயிரத்து 818 ரூபாய்.
மொத்தப் பரிசுத் தொகையில் 11.7 மில்லியன்
டாலர் தொகையை ரொக்கப் பணமாகப்
பெற்றுக்கொள்ள முடிவுசெய்துள்ளார்.
இதில் குறிப்பிட்டுள்ள தொகையைத் தனது
குடும்பத்தினருக்கும் மீதமுள்ள தொகையைத்
தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையாகவும்
வழங்க முடிவுசெய்துள்ளார் இந்த திடீர் கோடீஸ்வரர்.