Wednesday, May 14, 2025

EPFO பயனாளர்களுக்கு ஜாக்பாட் ! ‘Account’ ல 3000 ! யாரு யாருக்கு? என்ன காரணம்?

இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில், வாழ்க்கையைத் தொடங்கும் புதிதாக வேலைக்கு சேர்ந்த பலருக்காக மத்திய அரசு ஒரு நல்ல செய்தியைக் கொடுத்திருக்கிறது.

அதாவது, முதல்முறையாக வேலைக்குச் சேரும் ஊழியர்களின் EPFO கணக்கில், ரூ.3000 வரை அரசு நேரடியாக பணம் செலுத்தியிருக்கிறது.

இதுபோன்ற உதவிகள் கடந்த சில மாதங்களாக வழங்கப்பட்டு வந்தாலும், இந்த ஏப்ரல் மாதத்திற்கான தொகை தற்போது மே மாதத்தில் அவர்கள் பிஎப் கணக்கில் சேர்ந்திருக்கிறது.இந்த உதவியை பணிக்கு சேர்ந்தவுடன் அரசே உங்கள் PF-ல் முதல்முறை பங்களிப்பு செலுத்துவது போல நினைக்கலாம்.

தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்ததுபோல், ஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 லட்சம் பேர் EPFOவில் புதிய உறுப்பினர்கள் ஆகியிருக்கிறார்கள்.இவர்கள் மாத சம்பளம் ₹15,000க்கு உட்பட்டவர்களாக இருந்தால், இந்த நலத்திட்டத்தின் பயனாளியாக ஆகலாம் .

இப்போது முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தத் தொகை உங்கள் சேமிப்பு பாஸ் புக்கில் வந்து சேராது; அது நேரடியாக உங்கள் EPFO பிஎப் கணக்கில் மட்டுமே வந்து சேரும்.இதற்கான சம்பள வரம்பு, ஒரு மாதம் ₹1 லட்சம் வரை இருக்கலாம் என்று அரசு அறிவித்திருக்கிறது.இதுபோன்று, பிப்ரவரி மாதத்தில் மட்டும் 15 லட்சம் பேர் குறைந்தபட்சம் ₹3000 வரை நிதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.இன்னொரு பெரிய மாற்றம் என்னவென்றால் – EPFO-வில் வரப்போகும் ATM வசதி!

இப்போது பிஎப் பணத்தை எடுக்க பலர் கடினமான ஆன்லைன் ப்ராசஸ்கள் பண்ண வேண்டியதாக இருக்கிறது… இப்போது இதை மத்திய அரசு எளிமைப்படுத்தப் போகிறது ….

EPFO சந்தாதாரர்கள், இனிமேல் ATM கார்டு மாதிரி ஒரு புதிய PF கார்டை பயன்படுத்தி நேரடியாக ஏடிஎம் மூலம் பிஎப் பணத்தை எடுக்க முடியும்.இந்த கார்டுகள், உங்கள் ஆதார் மற்றும் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும்.இது 2025 மே – ஜூன் மாதங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இப்போது EPFO-வில் ஊழியர்கள் மாதம்  PF-க்காக 12% பங்களிக்கிறார்கள்…ஆனா இனிமேல் இதை தாங்கள் விரும்பும் அளவுக்கு உயர்த்திக்கொள்ளும் வசதியும் வருகிறது.உதாரணமாக, தற்போது ₹1800 கொடுக்கிறவர், விருப்பப்பட்டால் ₹2500, ₹3000 வரை PF பங்களிக்கலாம்.இதனால், சேமிப்பு பழக்கமும் அதிகரிக்கும், வருங்கால நலனும் உறுதி செய்யப்படும்.

Latest news