த.வெ.க. தலைவர் விஜய் கரூரில் கடந்த 27-ந் தேதி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு விசாரணைகளும் நடந்து வருகின்றன. இந்த சம்பவத்தை நேரில் விசாரிக்க பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆலோசனையின்படி எம்.பி.க்கள் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் உள்ள பிரபல நடிகையும், எம்.பி.யுமான ஹேமமாலினி கூறியதாவது:
பெரிய நடிகருக்கு சிறிய சாலையை ஒதுக்கியது நியாயமில்லை. விஜயை பார்க்கவே பெண்கள், சிறுமிகள் என பலரும் வந்துள்ளனர்.
விஜய் பிரசாரத்திற்கு குறுகிய இடத்தை போலீசார் கொடுத்து இருக்கிறார்கள். பெரிய இடம் கொடுத்திருந்தால் இது நடந்திருக்காது.
இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு? என்ற கேள்வி தான் தற்போது எழுகிறது. * என்ன நடந்தது என்ற அனைத்து தகவல்களையும் சேகரித்துள்ளோம் என்று கூறினார்.