Tuesday, September 30, 2025

‘வெறும் நாய்க்கீறல்தானே’, அசால்ட்டா இருந்தா உயிருக்கே ஆபத்து!

ரேபிஸ் என்பது ஒரு வைரஸ் தொற்று. இந்தியாவில் இந்தத் தொற்று பெரும்பாலும் நாய்களிடமிருந்து பரவுகிறது. இதைத் தவிர பூனைகள், நரி, கீரிப்பிள்ளை உள்ளிட்ட விலங்குகளிடமிருந்தும் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

“கடித்தால் தான் ரேபிஸ் வரும், கீறினால் எந்த பாதிப்பும் இல்லை” என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. ரேபிஸ் வைரஸ் பாதிக்கப்பட்ட விலங்கின் உமிழ்நீரில் அதிகமாக இருக்கும். நாய்கள், பூனைகள் தங்களுடைய நக்கங்களை நாக்கால் நக்குவது சாதாரணம்.

இதனால், அந்த உமிழ்நீர் நகத்தில் தங்கி, நம் தோலில் ஒரு சிறிய கீறல் ஏற்பட்டால் போதும். வைரஸ் நம் ரத்தத்திற்கு புகுந்து நோய் ஏற்படுத்தக்கூடும். எனவே, கீறல்களை அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

“இது எங்கள் வீட்டில் இருக்கும் நாய், தடுப்பூசியெல்லாம் போட்டிருக்கிறோம், எனவே பயமில்லை” என்று சொல்லுவோம். ஆனால் இது கூட ஒரு பெரிய அலட்சியமே. செல்லப்பிராணிகளுக்கு வருடம் தோறும் ரேபிஸ் தடுப்பூசி அவசியம் போட வேண்டும். சில நேரங்களில் தடுப்பூசி சரியாக செயல்படாமலும் அல்லது போடப்பட்ட தடுப்பூசி, விலங்கின் உடலில் போதுமான எதிர்ப்பு சக்தியை உருவாக்காமல் போயிருக்கலாம்.

உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள்:

நாய் அல்லது பூனை கடித்தாலோ அல்லது கீறினாலோ அந்த இடத்தை ஓடும் நீரில், சோப்பு போட்டு குறைந்தது 15 நிமிடங்களுக்குக் கழுவ வேண்டும்.

தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி, மருத்துவரின் ஆலோசனையின் படி ரேபிஸ் தடுப்பூசி முழு டோஸ்களையும் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News