நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா மகாராஷ்ட்ரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என்று நகைச்சுவையாக விமர்சனம் செய்தார். இதனால் ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவாளர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் மும்பை கார் பகுதியில் உள்ள ஓட்டலில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா நிகழ்ச்சி நடத்திய பகுதியை சூறையாடி சேதப்படுத்தினர்.
தாக்குதல் நடத்திய சிவசேனா கட்சியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி எனக் கூறியதில் தவறு ஏதும் இல்லை என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.