தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குன்னூரில் திரண்டு இருந்த கூட்டத்தினர் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது : திமுக ஆட்சிக்கு வந்து 52 மாதம் முடிந்தது, இன்னும் 7 மாதமே இருக்கிறது. குன்னூருக்கு ஏதாவது பெரிய திட்டம் வந்திருக்கிறதா? விலைவாசி விண்ணை முட்டும் அளவு உயர்ந்துவிட்டது.
குன்னூர், கூடலூர், உதகை வியாபாரிகளுக்கு ஏற்பட்டிருக்கும் கடும் பாதிப்பிலிருந்து அவர்களை மீட்டெடுக்க அதிமுக அரசு துணை நிற்கும். திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை. போதைப் பொருள் இல்லாத இடமே கிடையாது. இதனால் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி சீரழிகிறார்கள்.
திமுகவுக்கு சோதனை வந்தபோது, கட்சி அலுவலகத்தை பிரிந்து சென்றவர்கள் கைப்பற்ற நினைத்தபோது, அதைக் காப்பாற்றிக் கொடுத்தது ஜெயலலிதா தான் என்பதை மறந்துவிடாதீர்கள். எப்போதும் அதிமுகவுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்துதான் பழக்கம். ஆனால் திமுக மக்களுக்கும் உதவிசெய்தது கிடையாது, கூட்டணி கட்சிக்கும் உதவி செய்த வரலாறு கிடையாது என பேசினார்.
