நெல்லையில் பாரதிய ஜனதா கட்சியின் குமரி மண்டல அளவிலான பூத் கமிட்டி மாநாடு தொடங்கியது. இதில் பாஜக மாநிலத் தலைவர் நயினார்நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, முன்னாள் ஆளுனர் தமிழிசைசவுந்தர்ராஜன், தேசிய மகளிரணி தலைவர் வானதிசீனிவாசன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதில் அண்ணாமலை பேசியதாவது : எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமர வைக்க வேண்டியது NDA கூட்டணி தொண்டர்களின் பொறுப்பு. எதை பார்த்தாலும் பயந்து கொண்டிருக்கும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்திற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதியாக்குகிறது பாஜக . 2026 சட்டமன்ற தேர்தலில் வென்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.