Tuesday, January 14, 2025

ஆசியாவிலேயே அதிகமான போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரம் இதுதான்

இந்த நகரத்தில் வாகனத்தில் செல்வதை விட நடந்தே சென்று விடலாம் என்று தோன்றும் அளவிற்கு ஒரு நகரத்தில் அதிகமான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. அந்த நகரம் கர்நாடகாவில் உள்ள பெங்களூர்தான்.

Tomtom Traffic Index நடத்திய ஆய்வு ஒன்றில் மணிக்கு 18 கி.மீ தூரம் சராசரி வேகத்துடன் மெதுவாக நகரக்கூடிய வாகனங்களின் பட்டியலில் பெங்களூர் 6வது இடத்திலும் ஆசியாவிலேயே முதல் இடத்திலும் உள்ளது. இந்த டாம் டாம் டிராஃபிக் ஆய்வானது 55 நாடுகளில் உள்ள 387 நகரங்களில் ஆய்வு செய்துள்ளது.

ஓட்டுநர்கள் 10 கிமீ தூரத்தை கடக்க 28 நிமிடங்கள் ஆகின்றன. இதனால் அனைவரின் நேரமும் டிராஃபிக்கிலேயே வீணாவதாக கூறுகிறது. இதற்கு அதிகரிக்கும் மக்கள் தொகையும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

பெங்களூருவில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், போக்குவரத்து நெருக்கடிகள் அதிகரிக்கின்றன. தற்போது சுமார் 2.5 மில்லியன் தனியார் கார்கள் சாலைகளில் உள்ளன.

போக்குவரத்துக்கு நெரிசலை சமாளிக்க மேம்பட்ட சாலை வசதி, மெட்ரோ வசதி, மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், எப்போதும் பணியில் இருக்கும் போக்குவரத்து காவலர்கள் என முடிந்தவரை அனைத்து உள்கட்டமைப்பு திட்டங்களை செய்தும் இந்த கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல் திணறுகிறது.

Latest news