விஜய் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இல்லாத நிலையில், அவரை கைது செய்ய வேண்டும் என கூறுவது அர்த்தமற்றது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் விவாகரத்தில் அரசு ஏற்கெனவே சிலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது, புலன் விசாரணைக்கு பிறகு வேறு யார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென காவல்துறை முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தார்.
விசாரணை தொடங்குவதற்கு முன்பே அண்ணாமலை உள்ளிட்டோர் அரசியல் உள்நோக்கத்தோடு கருத்து தெரிவித்துள்ளார்கள் என்றும் குற்றம்சாட்டினார். திமுக ஆட்சியில் இருப்பதால் விமர்சனத்திற்கு உள்ளாகிறது, திட்டமிட்டு திமுகவிற்கும் திமுக அரசுக்கு எதிராகவும் சிலர் வெறுப்பை பரப்பி வருகின்றனர் என்றும் வேதனை தெரிவித்தார்.
விஜய் பெயர் இதுவரை முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை, அப்படி இருக்கும்போது அவரை கைது செய்ய வேண்டும் என கூறுவது அர்த்தமற்றது என்றும் தெரிவித்தார்.