Monday, September 1, 2025

தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வருவது வழக்கம்தான் – அமைச்சர் எ.வ.வேலு

சென்னை கொளத்தூர் ரெட்டேரி சாலை சந்திப்பு அருகில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் கொளத்தூர் ஏரிக்கரையின் பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் சேகர்பாபு ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, யார் ஆளுங்கட்சியாக இருந்தாலும் மக்கள் கோரிக்கை நிறைவேற்றுவதைதான் பார்க்க வேண்டும் என்றும், அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் மக்கள் நலப் பணிகளை அதிகம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுவதில் எதுவுமே உண்மையில்லை என்றும் குறிப்பிட்ட அமைச்சர் எ.வ. வேலு, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் வரவேற்கின்றனர் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் பாஜக எப்போதும் காலூன்ற முடியாது என்று கூறிய அமைச்சர் எ.வ.வேலு, தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வருவது வழக்கம்தான் என்றார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News