Thursday, May 22, 2025

ஈரானின் அணுசக்தி மையங்களை குறிவைக்கும் இஸ்ரேல்! எச்சரிக்கும் அமெரிக்கா! காலக்கெடு முடிந்தது!

சமீப நாட்களில் சர்வதேச நகர்வுகளை பார்க்கும்போது இஸ்ரேல் – ஈரானுடனான விரிசல் அதிகரித்தே வருகிறது. இந்நிலையில் ஈரானின் அணுசக்தி மையங்கள் மற்றும் அதன் உள்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த உள்ளதோடு இதற்கான நடவடிக்கைகளுக்கு இஸ்ரேல் தயாராகி வருவதாகவும் அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர், ஈரான் அணுசக்தி மையங்களின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு ஒருசில மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது எனவும் இருநாடுகள் இடையே போர்சூழல் தற்போது சூடுபிடித்துள்ளது தான் இதற்கு முக்கிய காரணம் எனவும் கூறியுள்ளார். மேலும் ஈரானின் அணுசக்தி மையங்களின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை சார்பில் வார்னிங் செய்யப்பட்டுள்ளது.

மட்டுமல்லாமல் “ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முயன்று வருகிறது. இந்த அணுஆயுத தயாரிப்பை கைவிட வேண்டும். அணுசக்தி திட்டத்தின் கீழ் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்பது தொடர்பாக எங்களுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானிடம் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதைப்பற்றி இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தாலும் இன்னும் எந்த விதமான உடன்பாடும் எட்டப்படவில்லை.

குறிப்பாக இந்த சம்பவம் பற்றி ஈரான் முடிவெடுக்க 60 நாள் காலக்கெடுவை அமெரிக்கா வழங்கியது. இந்த காலக்கெடு முடிவடைந்தும் ஈரான் இன்னும் தாமதித்து வருகிறது. ஈரான் ஒருவேளை ஒப்பந்தம் செய்யாவிட்டால் அமெரிக்காவும், ஈரானை தாக்கலாம். இருப்பினும் தற்போதைய சூழலில் ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தையில் சுமூகமான சூழல் நிலவி வருவதால் ஒப்பந்தம் வரை அமெரிக்கா ஈரானை அணுசரித்து செல்லாம் என்றும் சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஆனாலும் இன்னும் சில வாரங்களுக்கு பிறகும் ஈரான் இதே போக்கை கடைபிடித்தால் இஸ்ரேலும், அமெரிக்காவும் கைகோர்த்து ஈரான் மீது அதிரடி நடவடிக்கைகளை துவங்கலாம் என்று சர்வதேச வல்லுநர்கள் Warning கொடுப்பது சர்வதேச அரங்கில் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது.

Latest news