இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக, சென்னையில் 3வது நாளாக 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக, இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு புறப்படும் 350 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக சென்னையில் 3வது நாளாக 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட் செல்லும் 18 விமானங்களும், துபாய், அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 18 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர்.
