Wednesday, July 30, 2025

இஸ்ரேலால் ஈரானை ஒன்னும் செய்ய முடியாது !காரணம் இது தான்?

இஸ்ரேல் நினைத்தாலும் ஈரானை தாக்குவது எளிதல்ல. ஏன் தெரியுமா?


அதற்கு பல முக்கிய காரணங்கள் இருக்கிறது… அதில் முதலில் இருப்பது புவியியல்… ஈரான் ஒரு மலைகளால் சூழந்த நாடு. அதன் எல்லைகள் பெரும்பாலும் மலையகங்கள், பாலைவனங்கள், மற்றும் கடல் சூழலாக உள்ளன. இதன் காரணமாக, வெளியிலிருந்து ராணுவ தாக்குதலை நடத்துவது மிகவும் சவாலானது.

இது மட்டும் இல்லாமல், ஈரான் ஒரு பரந்தபட்ட நாடு. மேற்கில் ஈராக், கிழக்கில் ஆப்கானிஸ்தான், வடக்கில் காஸ்பியன் கடல், தெற்கில் பெர்சியக் கொள்கை போன்ற பல ராணுவ ரீதியாக முக்கியமான எல்லைகள் இருக்கின்றன. இதனால், ஒரு முனையில் தாக்கினாலும் மற்ற முனைகளில் பதிலடி சாத்தியம் அதிகம்.

சரித்திரத்திலேயே, ஈரானை முழுமையாக தோற்கடிக்க முயன்றவர்கள் தோல்வி கண்டுள்ளனர். சதாம் ஹுசைன் இதற்கு சிறந்த உதாரணம். 1980ல் ஈராக் ஈரானை தாக்கியது. எண்ணற்ற ஆயுதங்களும், இழப்புகளும் நடந்தபோதும், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் ஈரானை வெல்ல முடியவில்லை. காரணம், ஈரானின் தேசப்பற்று, மக்களின் ஒற்றுமை, மற்றும் அவர்களது நிலையான தாக்குதல் திறன்.

இன்று, ஈரானின் நிலைப்படை 6 இலட்சத்துக்கும் மேலான வீரர்களைக் கொண்டுள்ளது. இதில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை என்பது ஒரு தனியான சக்தியாகவே செயல்படுகிறது. இது ஒரு நாடு இரண்டாக பிரிந்து இரு ராணுவங்களை வைத்திருப்பதைப்போல் தான்.

இஸ்ரேலை ஒப்பிட்டால், ஈரான் எண்ணிக்கையில் பலமாக இருக்கிறது. விமானப்படை, டாங்கிகள், கடற்படை, ஏவுகணைகள் என அனைத்து துறைகளிலும் பெருமளவு ஆயுதங்கள் இருக்கின்றன.

ஈரானின் ஏவுகணை பங்களிப்பு தான் இப்போது உலகம் கண்காணிக்கிறதது. 3,000 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் உள்ளன. ஹைப்பர்சோனிக், லாங்க் ரேஞ்ச், ஷோர்ட் ரேஞ்ச் என பல்வேறு வகைகள். ஷஹாப்-3, கைபர் ஷேகான், ஃபதே-110 போன்ற ஏவுகணைகள் இந்தியா வரை சென்றடையும் திறன் கொண்டவை.

இஸ்ரேலிடம் நவீன ஏவுகணைகள் இருந்தாலும், ஒரு மாபெரும் தாக்குதலுக்கு புவியியல் மற்றும் பெரும்பான்மையான ராணுவ ஆதரவு முக்கியம்.

அதனால் தான், ஈரானை தாக்குவது எளிதல்ல. பதிலடி என்பது நேரத்தில் மட்டுமல்ல, தாக்கத்தில் பெரும் எதிர்வினையை ஏற்படுத்தக்கூடியது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News