காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 104 பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். 253 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள சூழலில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
கடந்த 10-ந்தேதி போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்று கொள்ளப்பட்டது. எனினும், இதன் பின்னர் இஸ்ரேலின் தாக்குதலில் 211 பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். 597 பேர் காயமடைந்து உள்ளனர்.
