Sunday, December 21, 2025

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? சென்னையில் சிறப்பு முகாம்

தமிழகத்தில் தீவிர திருத்தப்பணிக்கு பின்னர் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று முன்தின் வெளியிடப்பட்டது. இதில் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது பட்டியலில் 5.43 கோடி வாக்காளர்களே உள்ளனர்.

இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்களுக்காக சிறப்பு முகாம் சென்னையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்காக சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்று விண்ணப்பித்து சென்றனர்.

இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்காக சென்னையில் இரண்டாவது நாளாக இன்றும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. சென்னையில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

Latest News