சமீப காலமாக இந்தியர்களின் முதலீட்டு பழக்கங்களில் பெரிய மாற்றம் காணப்படுகிறது. நிலத்தில் முதலீடு செய்வதைவிட, நவீன தொழில்நுட்பம் சார்ந்த பிட்காயின் மீது மக்களின் கவனம் அதிகரித்து வருகிறது. பிட்காயின் போன்ற நவீன டிஜிட்டல் சொத்துகளுக்கு வேகமான விலை மாற்றங்கள், உலகளாவிய வர்த்தக வாய்ப்புகள், மற்றும் டிஜிட்டல் வசதிகள் இளைஞர்களை பெரிதும் ஈர்க்கின்றன.
இந்தியாவின் பிட்காயின் வைத்திருக்கும் அளவு உலகளவில் இரண்டாம் இடத்தில் இருக்க வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவுக்கு பிறகு, இந்தியர்கள் வைத்திருக்கும் பிட்காயின் எண்ணிக்கை சுமார் 10 லட்சம் நாணயங்கள் என மதிப்பிடப்படுகிறது. இது உலக பிட்காயின் சப்ளையின் 5%-க்கும் மேற்பட்ட அளவு ஆகும்.
இந்தியாவில் 9 கோடி மக்களுக்கும் குறைந்தது ஒரு வகை கிரிப்டோகரன்சி உள்ளதாக இருக்கலாம் என புள்ளி விவரம் தெரிவிக்கிறது. பிட்காயின் தான் பெரும்பாலான முதலீட்டாளர்களின் முதன்மை தேர்வாக உள்ளது. இது தங்கத்திற்கு மாற்றாக பார்க்கப்படும் “டிஜிட்டல் சொத்து” மற்றும் அதன் வரலாற்று மதிப்பு காரணமாக அதிக நம்பிக்கையை பெற்றுள்ளது.
இந்தியாவில் பிட்காயின் முதலீடு ஒரு பரவலான, விருப்பமான நிதி மாற்று வழியாக இருக்கிறது, அது நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்த மாற்றம் இளம் தலைமுறை முதலீட்டாளர்களுக்கு புதிய வாய்ப்புகளையும், வலுவான முதலீட்டு அணுகுமுறையையும் வழங்குகிறது.