Wednesday, April 16, 2025

அஸ்வினை ‘புறக்கணிக்கும்’ CSK தொடர் தோல்விக்கு ‘இதுதான்’ காரணமா?

நடப்பு IPL தொடரில் பெங்களூரு, டெல்லி, பஞ்சாப் மூன்றும், எதிரணிகளின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டி வருகின்றன. அதேநேரம் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவோடு சேர்ந்து ஆண்ட பரம்பரையாக வலம்வந்த சென்னை, மும்பை அணிகள், தோல்வியில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றன.

சென்னையின் தொடர் தோல்விக்கு கேப்டன் ருதுராஜ் ஓபனிங் இறங்காதது, அஸ்வினின் மோசமான பந்துவீச்சு, மிடில் ஆர்டர் சொதப்பல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் முன்வைக்கப் படுகின்றன. இந்தநிலையில் பந்துவீச்சில் சொதப்பும் அஸ்வினை, ஏன் மிடில் ஆர்டர் அல்லது ஓபனராக இறக்கி விடக்கூடாது? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

TNPL தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் பவுலிங் மட்டுமின்றி, பேட்டிங்கிலும் நன்கு ஸ்கோர் செய்தார். குறிப்பாக சேப்பாக்கம் மைதானத்தில் அரைசதம் அடித்து அதிரடி காட்டினார். நடப்பு தொடரில் கான்வே, ரச்சின், ருதுராஜ், துபே உள்ளிட்ட டாப் பேட்ஸ்மேன்கள், அத்தனை பேருமே பேட்டிங்கில் சொதப்புகின்றனர்.

எனவே அஸ்வினை ஓபனிங் இறக்கி, அவருக்கு தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பளிக்க வேண்டும் என்று, சமூக வலைதளங்கள் வாயிலாக, ரசிகர்கள் CSKவுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்தபோது அஸ்வின் முன்னதாக இறங்கி,ரன்களைக் குவித்துள்ளார். இதனால் சென்னை அணியிலும் அவருக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Latest news