புதுச்சேரி அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், போலி மருந்து குறித்து முதலமைச்சர் ரங்கசாமி விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
த.வெ.க தலைவர் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது. ஆனால் அவருடைய பேச்சில் தெளிவு இல்லை என்று கூறினார். முதலமைச்சர் ரங்கசாமியை விமர்சனம் செய்வதற்கு பதிலாக மத்திய அரசை விமர்சனம் செய்துவிட்டு சென்றதாக கூறிய அவர், விஜயை கட்சி ஆரம்பிக்க சொன்னதே ரங்கசாமி தான் என்றும் விஜய் பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி அரசு அனுமதி கொடுத்ததில் ஆச்சரியப்படுவதற்கு இன்றும் இல்லை எனவும் தெரிவித்தார்.
