நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சர்ச்சைக்குரிய காட்சிகள் காரணமாக இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாகவும் போகி பண்டிகை அன்று அதாவது வருகிற 14-ந்தேதி படத்தை வெளியிட பட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
