தங்க நகை இருக்கா? அதற்குப் பயன் தெரியுமா? அழகாக அணிவதற்கும், பண்டிகை நேரத்தில் காட்டிக்கொள்வதற்கும் மட்டும் இல்ல… அது நம்ம வாழ்க்கையில அவசர சமயத்தில் நிதி உதவி செய்யக்கூடிய ஒரு முக்கியமான ஆதாரமா இருக்கலாம். ஆனா, அந்த தங்கத்தைக் கடன் பெற பயன்படுத்தும்போது — அதுக்கும் சில முக்கியமான விதிகளும், கட்டுப்பாடுகளும் இருப்பதைக் நீங்கத் தெரிஞ்சுருக்கணும்…
இந்திய ரிசர்வ் வங்கி, தங்கம் மற்றும் வெள்ளி அடமான கடன்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை 2025ல் வெளியிட்டிருக்காங்க. இனிமேல் நகையெடுத்து நேரா வங்கிக்குப் போய் கடன் வாங்க முடியாது. மாறாக, அந்த நகை என்ன தரம், எத்தனை கிராம், எந்த நோக்கத்துக்கு கடன் வாங்கறீங்க — எல்லாமே மதிப்பீட்டு அடிப்படையில்தான் அமையப்போகுது.
22 காரட் அல்லது அதற்கு மேல்தரமுள்ள நகைகளும், வங்கிகள் விற்கும் தங்க நாணயங்களும் மட்டுமே அடமானத்துக்கு ஏற்றவையாகும். ஒரு நபர் வாங்கும் கடன் தொகை, அந்த தங்கத்தின் மதிப்பின் 75% விகிதத்தை தாண்டக்கூடாது. மேலும், கடன் பெற்ற பிறகு, அதை எவ்வாறு செலுத்தப்போகிறீங்க, வட்டி எவ்வளவு, திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் என்ன — என்பதையெல்லாம் முன்கூட்டியே நன்கு திட்டமிட்டிருக்கணும்.
கடனை தவற விட்டீங்கனா, வங்கி உங்களை ஏலத்திற்கு அனுப்பிடக்கூடாது. ஆனால், நீங்கள் தொடர்ந்து தவறிட்டீங்கனா — உங்கள் தங்கம் வங்கியால் ஏலத்தில் விடப்படும். அதற்கும் முன் உங்களுக்கு அறிவிப்பு வரும், அனால் பதிலெடுக்கலையென்றால் தங்கம் பறிபோகும் வாய்ப்பு உள்ளது.
முக்கியமான விஷயம் என்னனா, கடனை முழுமையாக செலுத்திய உடனே — ஏழு வேலை நாட்களுக்குள் உங்கள் நகையைக் குடுக்க வேண்டும். இல்லையென்றால், வங்கியே ஒரு நாளுக்கு ரூ.5,000 அபராதம் செலுத்த வேண்டிய நிலைக்கு வரும்.
இவ்வளவு விஷயங்கள் ‘Gold Loan’-ல இருக்குது… தங்க நகை வைத்திருப்பது சும்மா ஒரு அலங்காரம் அல்ல… நிதி ஆதரவும் கூட. ஆனா, அதையும் சரியான முறையில்தான் பயன்படுத்தணும். இல்லைன்னா, சிரமம் தான்!