Thursday, December 4, 2025

இப்படி தான் இந்திய மகளிர் அணி ஜெயிச்சாங்க?’அந்த’ 45 நிமிடங்களில் நடந்தது என்ன?

வெற்றி என்பது முயற்சியுடன் சேர்ந்து மனநிலையையும் சார்ந்தது. நம்முடைய எண்ணங்கள் எப்படித் திசைதிருப்பப்படுகின்றனோ, அதேபோல நம்முடைய செயல்களும் அதன் தாக்கத்தைப் பெறுகின்றன. இதில்தான் “Visualisation” எனப்படும் மனப்பயிற்சி ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.

Visualisation என்பது நம்முடைய இலக்கை மனதில் தெளிவாக கற்பனை செய்வது. உதாரணமாக, ஒரு மாணவர் தேர்வில் வெற்றி பெறும் தருணத்தையும், ஒரு பேச்சாளர் மேடையில் நம்பிக்கையுடன் பேசும் காட்சியையும் மனதில் உருவாக்கிக் கொள்வது. இப்படி மனத்தில் உற்சாகமான காட்சிகளை மீண்டும் மீண்டும் நினைத்தால், மூளை அதனை உண்மையாக அனுபவித்தது போலவே உணரும். இதன் மூலம் நம்பிக்கை, மன உறுதி, தன்னம்பிக்கை ஆகியவை பல மடங்கு அதிகரிக்கும்.

சமீபத்தில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் கூட இந்த Visualisation பயிற்சியை போட்டிக்கு முன்தினம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. வெற்றியை மனதில் முன்னரே கற்பனை செய்த அந்த மனப்பயிற்சி, அணியின் தன்னம்பிக்கையை பெரிதும் உயர்த்தியதோடு, அவர்கள் கோப்பையை வெல்லும் முக்கிய காரணமாகவும் இருந்ததாக வீராங்கனைகள் பகிர்ந்துள்ளனர். இதனால் Visualisation என்பது வெறும் மன அமைதி தரும் செயலல்ல. வெற்றிக்கான உள்மன ஆற்றலை வளர்க்கும் வழி என்பதும் நிரூபணமானது.

பல விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், வணிக தலைவர்கள் தங்கள் தினசரி பழக்கத்தில் Visualisation பயிற்சியைச் சேர்த்துக் கொள்கிறார்கள். சில நிமிடங்கள் அமைதியான இடத்தில் கண்களை மூடி, தங்கள் வெற்றிக் காட்சிகளை மனதில் வரையறுப்பது. இதுவே அந்த பயிற்சியின் அடிப்படை.

இந்த கற்பனை செய்யும் பயிற்சி மன அழுத்தத்தை குறைத்து, கவனத்தை நிலைநிறுத்தி, இலக்கை நோக்கி தன்னம்பிக்கையுடன் நகரச் செய்கிறது. நம்முடைய எண்ணங்களே நம்முடைய வாழ்க்கையின் திசையை தீர்மானிக்கின்றன. ஆகவே, நாம் விரும்பும் எதிர்காலத்தை மனதில் தெளிவாகக் காண கற்றுக்கொண்டால், அது நிஜமாக மாறும் சக்தி நம்முள் பிறக்கும்.

Visualisation மன வெற்றிக்கான திறவுகோல் மட்டுமல்ல, நம்பிக்கையால் நிரம்பிய வாழ்விற்கான வாசலும் கூட.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News