Smart Watch, Smartphone என பல சாதனங்களில் மக்கள் தாங்கள் அன்றாடம் நடக்கும் அடிகளை கணக்கிடுவதை வாடிக்கையாக மாற்றி வருகின்றனர். அதில், பலரும் பத்தாயிரம் அடிகள் என்ற இலக்கை நோக்கியே பயணிக்கின்றனர்.
இந்த பத்தாயிரம் அடி இலக்கை நிர்ணயித்தது யார்? அதனால் உண்மையில் பயன் உள்ளதா என இப்பதிவில் பார்ப்போம்.
1946ஆம் ஆண்டு டோக்யோ ஒலிம்பிக்கின் போது, பத்தாயிரம் அடிகள் என பொருள்படும் பெயர் கொண்ட ‘மன்போ – கெய்’ (Manpo-kei) என்ற பீடோமீட்டர் கருவியின் விளம்பரத்தினால் பிரபலமானது தான் பத்தாயிரம் அடிகள் நடைக்கணக்கு.
ஒருவரின் நடைக்கணக்கினால் ஆரோக்கியம் மேம்படுகிறதா என்பதை கண்டறிய, ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூலை சேர்ந்த மிலி என்ற மருத்துவ பேராசிரியர் இறக்கும் வகையில் நோய்வாய்பட்டிருந்த பெண்களின் நடை எண்ணிக்கையை ஆய்வு செய்தார்.
அந்த அறிக்கையில், 2700 அடிகள் நடந்த பெண் சீக்கிரமாக உயிரிழக்க நேரிட்டதாகவும், 4000 அடிகள் நடந்த பெண் சற்றே கூடுதலாக உயிர் வாழ்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 7500 அடிகள் நடந்தவர்களுக்கு குறிப்பிடத்தக்க உடல்நிலை முன்னேற்றம் மற்றும் ஆயுள் நீட்டிப்பு இருந்ததாகவும் அதற்கு மேல் நடந்தால் அதிகமான பயன் கிடைக்கும் என்பது நிச்சயமில்லை.
அது மட்டுமில்லாமல், பத்தாயிரம் அடிகள் நடக்க வேண்டுமே என நடப்பவர்களுக்கு அதனால் மகிழ்ச்சி கிடைப்பதில்லை எனவும், கணக்கு பார்த்து கொண்டே இருப்பதை விட கூடுமான வரையிலும் சுறுசுறுப்பாக இருப்பதே ஆரோக்கியமான வாழ்க்கைமுறையாக அமையும் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.