இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 500 ரூபாய் நோட்டுகளை நிறுத்தப் போவதாக வாட்ஸ் அப்பில் தகவல்கள் பரவின. ஆனால், இது உண்மையல்ல என்று ரிசர்வ் வங்கி மற்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மத்திய அரசு அல்லது ரிசர்வ் வங்கி இதுவரை 500 ரூபாய் நோட்டுகளை நிறுத்தும் அல்லது திரும்பப்பெறும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
எனவே, வாட்ஸ்ஆப்பில் பரவிய 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற தகவல் தவறானது என்பதையும், பொதுமக்கள் அதனை நம்பாமல் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.