Saturday, May 17, 2025

‘gold rate ‘ அதிகமா? கவலை படாதீங்க! அரசு தரும் இந்த சலுகையே போதும்!

தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.1000 மகளிர் உரிமை தொகையை month by month செலவழிக்காம, எளிமையாக தங்கம் போல் நிலையான மதிப்புள்ள முதலீடாக மாற்றலாம் என்றால் நம்பமுடியுமா?

முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்  – தங்கம் என்பது சாதாரண சேமிப்பு இல்லை. இன்றைய விலையிலேயே தங்கம் பதிவு செய்யப்பட்டு, வருங்கால விலை ஏற்றத்திலும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் ஒரு புத்திசாலி தனமான முதலீடு.

இந்த மகளிர் உரிமை தொகையை வைத்து, பிரபலமான நகை நிறுவனங்களில் தங்க நகை சீட்டு திட்டங்களில் சேரலாம். இதில், மாதம் ரூ.1000 கட்டினால் அந்த நாளுக்கான தங்க விலையில் உங்கள் பெயரில் தங்கம் பதிவு செய்யப்படும்.

மொத்தமாக 15 மாதங்களுக்கு ரூ.15,000 செலுத்தினால், பல நிறுவனங்கள் செய்கூலி இல்லாமல் தங்கம் வழங்குவது  மட்டுமல்லாமல், கூடுதல் சலுகையாக ₹2000-₹4500 வரை மதிப்புள்ள தங்கம் அல்லது பணமாக  திருப்பித் தருகிறார்கள். இதனால், 2.5 கிராம் தங்கம் வாங்கும் அளவுக்கு மதிப்பு கிடைக்கும்.

அதாவது, உங்கள் ரூ.1000 மகளிர் உரிமை தொகை… 15 மாதங்களுக்கு முடிவில் ₹18,000 மதிப்புள்ள தங்கமாக மாறும்! இதுதான் ஸ்மார்டான சேமிப்பு.

மேலும், இந்த திட்டத்தில் விரிவாக்கமாக புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 4ம் தேதி தமிழகமெங்கும் 9000 இடங்களில் கேம்புகள் நடக்க உள்ளன.

தற்போது 1.25 கோடி பெண்கள் இந்தத் திட்டத்தில் பயன் பெறுகிறார்கள். விரைவில் கூடுதல் 10–15 லட்சம் பெண்கள் இந்த வரிசையில் சேரப் போகிறார்கள்.

மகளிர் உரிமை தொகையை, செலவல்லாமல்… முதலீடாகப் பாருங்கள். உங்கள் எதிர்கால நிம்மதிக்கு ஒரு பொன்முதலீட்டில் நீங்களும் கையெழுத்துப் போடுங்கள்.

Latest news