Wednesday, October 1, 2025

அமைச்சர் அன்பில் மகேஷ் நல்லா நடிப்பாரு??

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்றால் யாருக்கும் தெரியாமல் இல்லை, இவர் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். மேலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நெருங்கிய நண்பரான அன்பில் மகேஷ், இவர் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சியில் உள்ள திருவெறும்பூர் தொகுதியில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார்.

இதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அதேதொகுதியில் வென்ற அன்பில் மகேஷுக்கு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமீபகாலமாக ட்ரோல் செய்யப்பட்டும் வருகிறார். இதற்கு முக்கிய காரணம், கரூரில் நடந்த சம்பவம். கடந்த வாரம் கரூரில் விஜய் கலந்துகொண்ட த.வெ.க பரப்புரை கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் மூச்சுத் திணறியால் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு, அமைச்சர் அன்பில் மகேஷை உடனடியாக செல்லுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதாக தெரிகிறது. இதையடுத்து கரூர் சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ், அங்கு மருத்துவமனை வாசலில் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அதுகுறித்த வீடியோ காட்சியும் வெளியாகி வைரலானது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவர் நடிப்பதாக விமர்சித்தனார். மேலும், அன்புணி ராமதாஸ் கூட அன்பில் மகேஷுக்கு ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாம் என கிண்டலடித்து இருந்தார். இப்படி அன்பில் மகேஷ் நடிக்கிறார் என பலரும் கூறி வரும் நிலையில், அவர் அரசியலுக்கு வரும் முன் நடிகராக ஒரு சீரியலில் நடித்த தகவல் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, அவர் நடித்த சீரியலின் பெயர் அகல்யா. கடந்த 2004-ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியலாக இருந்தது. அந்த சீரியலில் அவர் நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது நெட்டிசன்கள் மீண்டும் வைரலாக்கி வருகிறார்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News