இப்போதெல்லாம் தமிழ் இசை ரசிகர்கள் “ராக் ஸ்டார்” என்றால் நினைவிற்கு வருவது அனிருத் தான். 16 வயதில் தான் முதல் முறையாக “3” படத்துல இசையமைத்து தமிழ்ச் சினிமாவுக்கு அறிமுகமான இவர், இன்று இந்திய சினிமாவின் மிக அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களில் ஒருவர்.
அவரை எல்லோருக்கும் அறிமுகம் செய்தது “Why This Kolaveri” பாடல் தான். அந்த ஹிட்டுக்குப் பிறகு விஜய், அஜித், சூர்யா, ரஜினி, கமல்ஹாசன் என மிகப்பெரிய ஹீரோக்கள் படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்தார். இப்போ இந்தி சினிமாவிலும் “ஜவான்” படத்தின் மூலம் ஹிட் அடிச்சார். தெலுங்கில் கூட “தேவரா” படத்தின் மூலம் வரவேற்பு பெற்றுள்ளார்.
அனிருத், பிரபல நடிகர் ரவி ராகவேந்திராவின் மகனாகவும், ஒரு வகையில் ரஜினிகாந்தின் உறவினராகவும் இருக்கிறார். தற்போது கூலி, மதராசி, ஜனநாயகன், ஜெயிலர் 2 போன்ற ப்ராஜெக்ட்ஸ்ல பிஸியாக இருக்கிறார். அதுமட்டுமல்ல, “ஹுக்கும்” என்ற பெயரில், நாடு நாடாக இசை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார்.
இத்தனை பிஸியான விஷயங்கள் நடக்கும்போது, அவரை சுற்றி காதலும், திருமண வதந்திகளும் வந்து கொண்டே இருக்கின்றன. ஒரு காலத்தில் கீர்த்தி சுரேஷுடன் அவரது புகைப்படங்கள் வைரலானதால், இருவரும் திருமணம் செய்ய போகிறார்கள் என்ற பேச்சு இருந்தது. ஆனால், கீர்த்தி தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனியை திருமணம் செய்துகொண்டார்.
இப்போ புதிய செய்தி என்னனா, அனிருத் நீண்ட காலமாக ஒரு பெண்ணை காதலித்து வருகிறார். அந்த பெண் வேறு யாருமல்ல, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளரும், சன் பிக்சர்ஸ் தலைவர் கலாநிதி மாறனின் மகளுமான காவ்யா மாறன் தான் என தகவல் வெளியாகி இருக்கிறது .
காவ்யா, சன் நெட்வர்க் குழுவில் முக்கிய பொறுப்பில் இருப்பதோடு, ஐபிஎல் போட்டிகளில் தரும் அழகான ரியாக்ஷன்களால் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார். சமூக வலைதளங்களில் அதிகமாக ஆக்டிவாக இல்லையென்றாலும், அனிருத் மற்றும் காவ்யா பல ஆண்டுகளாக டேட்டிங் செய்து வருகிறார்கள் என்ற தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. வதந்தியாகவும் கூட இருக்கலாம் …
சுமார் ரூ.33,400 கோடி சொத்து மதிப்புள்ள கலாநிதி மாறனின் வாரிசாக காவ்யா இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையமைத்த படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் காவ்யா பங்கேற்றதையும் காணலாம்.
இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்ற தகவல் தற்போது ட்ரெண்டாகி வரும் நிலையில், இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.