நவம்பர் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை முக்கிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. அக்டோபர் மாதத்தில் விலை அதிகரித்து வரலாறு காணாத உச்சம் தொட்டது. ஆனால் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு குறைய ஆரம்பித்தது.
உதாரணமாக, நேற்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ஒரு கிராம் ரூ.70 குறைந்து ரூ.11,180வும், ஒரு சவரன் ரூ.560 குறைந்து ரூ.89,440வும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று அதே 22 காரட் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து, கிராமுக்கு ஒரு கிராம் ரூ.11,250வும், சவரனுக்கு ரூ.90,000வும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல் 18 காரட் தங்கம் கிராமுக்கு ஒரு கிராம் ரூ.65 உயர்ந்து 9,390 ரூபாயாகவும் சவரனுக்கு ரூ.75,120 என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளி விலை ஒரு கிராம் 164 ரூபாயாகவும், ஒரு கிலோ 1,64,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
பல்வேறு வர்த்தக காரணிகள் தங்க விலையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. போட்டித் தன்மை அதிகரிப்பு, சர்வதேச நிலைப்பாடுகளில் திடீர் மாற்றங்கள், நாணய மதிப்பு போன்றவற்றை சொல்லலாம். ஒரு சில தகவலின்படி, குறுகிய காலத்தில் தங்க விலை விரைவில் குறைய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டாலும் மற்ற ஆய்வுகள், 2026 முதல் விலையில் நிலைத்தன்மை ஏற்படும் முன் மீண்டும் உயர்வுக்கான வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கின்றனர்.
நீண்டகாலத்தில் அதாவது 2026ன் முதல் அரையாண்டு வரை தங்க விலை மீண்டும் உயரக்கூடும் என பல அறிக்கைகள் கூறுகின்றன. இதனால், சந்தையில் உடனடியாக தங்கத்தை வாங்க அல்லது விற்க திட்டமிடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் முதலீட்டாளர்கள் எதிர்பாராத நேரத்தில் இனி தங்கம் விலை உயரலாம் என்ற சாத்தியக்கூறுகளும் உள்ளன.
