MRP + GST பில் போடுவது சட்டப்படி சரியா? எங்கு புகாரளிக்க வேண்டும்?

பொருட்கள் வாங்கும்போது பல கடைகளில் “MRP + GST” என்று தனியாக பில் போடுவதை நம்மால் காண முடிகிறது. ஆனால் இது சட்டப்படி தவறான நடைமுறை என்று நுகர்வோர் நல பாதுகாப்பு சட்டம் கூறுகிறது.

MRP என்று சொல்லபப்டும் Maximum Retail Price என்பது உற்பத்தியாளர் நிர்ணயித்துள்ள அதிகபட்ச விலை. அதாவது, அந்தப் பொருளுக்கு உற்பத்தி செலவு, விநியோக செலவு, வரிகள் அதாவது GST உட்பட அனைத்தையும் சேர்த்து தான் MRP நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, விற்பனையாளர் MRP-க்கு மேல் தனியாக GST வசூலிக்கக்கூடாது.

உதாரணமாக, ஒரு பானத்திற்கு MRP ரூ.50 என இருந்தால், அதற்கான GST தொகையும் அந்த ரூ.50-க்குள் அடங்கியிருக்கும். விற்பனையாளர் “50 + 5 ரூ. GST” என்று கூடுதலாக கேட்பது சட்டவிரோதம்.

அதே நேரத்தில், சில பொருட்களுக்கு விற்பனையாளர் விலைப்பட்டியல் அதாவது Tax Invoice கொடுக்கும் சூழல் இருக்கலாம். உதாரணமாக, ஹோல்சேல், விநியோகஸ்தர், அல்லது வணிகத்தில் பயன்படுத்தும் வாடிக்கையாளர் வாங்கும்போது, MRP இல்லை; அப்போது GST தனியாக காட்டப்படும். ஆனால் சாமான்ய நுகர்வோர் MRP பொருட்கள் வாங்கும்போது, GST தனியாக கேட்பது முற்றிலும் தவறு.

நுகர்வோர் இத்தகைய முறைகேட்டை சந்தித்தால், Consumer Helpline 1800-11-4000 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் அல்லது ஆன்லைன் Consumer Protection Portal-ல் புகார் செய்யலாம்.

ஆக, MRP-ல் GST உட்படத்தான் இருக்கும் என்பதால், கடைகள் MRP-க்கு மேலாக GST வசூலிக்கக் கூடாது என்பது சட்டத்தின் தெளிவான விதிமுறை.

Related News

Latest News