மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், நோய் பரவல் தடுப்பதற்காக பாதுகாப்பான மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும். குறிப்பாக நீரை நன்கு கொதிக்க வைத்து பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
நீரை கொதிக்கவைப்பதால், நீரில் கலந்துள்ள பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் புரோட்டோசோவா போன்ற நோய்க்கிருமிகளை அழித்துவிடும்.
100 டிகிரி செல்சியஸ் வரை நீரை அதிகபட்சமாக சூடாக்கும் போது பெரும்பாலான நுண்ணுயிர்கள் அழிந்து விடும். இதனால் நீரினால் பாதிக்கும் நோய் பெரிதும் குறையும்.
ஆர்.ஓ. போன்ற சுத்திகரிக்கப்பட்ட நீர்களை அடிக்கடி கொதிக்க வைத்துக்கொள்ள தேவையில்லை, ஏனெனில் இவை பலகட்ட வடிகட்டுதல்களின் வழியாக பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பிற நுண்கிருமிகளை அகற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனினும், ஆர்.ஓ. அமைப்புகள் சரியாக பராமரிக்கப்படாவிட்டால் நீர் மாசுபடக்கூடும்.
