விஜய் தனது அரசியல் பயணத்தை அறிவித்ததும், அவரது தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் மாநாட்டை நடத்தியதும், தமிழ் சினிமா உலகில் ஆதரவும், எதிர்ப்புமாக கலவையான கருத்துகள் எழுந்து வருகின்றன.குறிப்பாக பெரும்பாலான நடிகர்கள் விஜயின் அரசியல் பயணத்தை ஆதரிக்கவில்லை.
அந்த வகையில், நடிகை தேவயானியின் கணவரும், இயக்குநரும், நடிகருமான ராஜகுமாரன் விஜயின் அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிகிறது .
இதுகுறித்து அவர், ‘‘விஜய் நல்லது செய்வதற்குத்தான் அரசியலுக்கு செல்கிறேன் போகிறேன் எனச் சொன்னால் நான் அதை ஒத்துக்கொள்ள மாட்டேன். 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு இருக்கிற நீங்க அதை வைத்துக் கொண்டு மக்களுக்கு எவ்வளவோ நல்லது பண்ணலாம். ஒரு அரசாங்கத்தால முடியாததைக்கூட நீங்க செய்யலாம் என்று தெரிவித்தார்.
மேலும், பேசிய அவர்; விஜய் அரசாங்கத்தையே ஆளனும் என நினைக்கிறார். இந்த சினிமாவை மட்டும் ஆண்டது போதாதா? அவர் சினிமாவ நிச்சயமாக ஆள்கிறார். நாட்டையும் ஆள வேண்டும் என்கிற ஒரு எண்ணம் இருக்கிறது. நல்லது செய்வதற்கு பணம் இருந்தாம் நம்ம எவ்வளவோ நல்லது செய்யலாம். வாங்கும் சம்பளத்தில் 100 கோடி ரூபாயை வைத்துக் கொண்டு 300 கோடியை மக்களுக்கு செய்யலாம். இதை அரசாங்கத்தால்கூட செய்ய முடியாது. வருஷத்தில் இரண்டு படங்களில் விஜய் நடிக்கிறார்.
அரசியல் அவ்வளவு நல்லது கிடையாது. அதைச் சமாளிக்கவே உங்களுக்கு நேரம் பத்தாது. நீங்கள் எங்கே நல்லது செய்வீர்கள்? சும்மா விட்டுவிடுவார்களா? அரசியலில் நல்லது செய்ய வேண்டும் என்றால் நாம் இப்போது இருக்கிற இடத்தில் உட்கார்ந்து கொண்டு செய்யலாம். அவர் அரசியலுக்கு வந்து அதை செய்யலாம், நாட்டையும் ஆள வேண்டும் என்பது அவருடைய மிக உயர்ந்த சிந்தனை. விஜய்க்கு அது நல்லதா? நடக்கும் என்று நினைக்கிறீர்களா? எனக்கேட்டால் அது நடக்காது’’ என்று ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.