தவெக தலைவர் விஜயின் அரசியல் பிரவேசம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு எதிராக கடுமையான விமர்சனம் செய்து வருகிறார் திரைப்பட இயக்குநரும், திமுக அனுதாபியுமான கரு.பழனியப்பன்.
தவெகவின் கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்து கரு.பழனியப்பன் விஜயை உக்கிரமாக, ஒருமையில் பேசி வருவது விஜய் ரசிகர்களை கொந்தளிக்க வைத்து வருகிறது. இந்த நிலையில் விஜய் குறித்து மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளர் கரு.பழனியப்பன்,
அவர் பேசியதில் “எனக்கு விஜய் வெளியிட்ட வீடியோவை பார்த்த பிறகு தான் அவர் ஏன் எப்படி இருக்கிறார் என்று நினைத்தேன். “CM சார்… என்னை என்ன வேணாலும் பழிவாங்குங்கள் சார்” என FIR-ரில் தனது பெயர் இல்லை எனத் தெரிந்தவுடன் அறிக்கை விடுவது இருக்கிறது இல்லையா அது மிகப் பெரிய காமெடித் தனத்தின் உச்சம். புஸ்ஸி ஆனந்தை ஒளித்து வைத்திருப்பது நீங்கள் தானே. அவரை தேடிக் கொண்டிருக்கிறார்கள் இல்லையா? இப்போது அவர் எங்கே போனார்? நீங்கள் ஏன் ஓடி ஒளிகிறீர்கள் முதலில்..விஜய் அண்பிட்” என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
மேலும், பேசிய அவர் “நீங்கள் காலையில் பனையூரில் எழுந்திரித்து, பனையூரிலேயே சாப்பிட்டு, பனையூரிலேயே தூங்கி, மீண்டும் பனையூரிலேயே எழுந்துரித்து, பனையூரிலேயே சாப்பிட்டு, பனையூரிலேயே தூங்கி… உங்களுக்கு உலகம் பனையூரைத் தாண்டி என்ன தெரியும்? குறைந்தபட்சம் உங்களுக்கு எழுதி கொடுக்கிறார்கள் இல்லையா? அவர்களுடனாவது பேசுகிறீர்களா? எழுதிக் கொடுத்த பேப்பரை அப்படியே வைத்து பேசுவீர்களா? தெரியாது. இல்லையென்றால் ஏன் குனிந்து வந்து படிக்கிறீர்கள் நாமக்கல்லில் போய். நான் செல்கிறேன் கொஞ்சம் கூட அறிவே இல்லாத அது ஒரு மக்குக் கூட்டம். ரொம்ப டேஞ்சர் தெரியுமா? நான் விஜய்யையும் சேர்த்து தான் சொல்கிறேன் அது ஒரு மக்குக் கூட்டம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு, “தலைவனா அவன்? முட்டாள்!” என்று கூறி, விஜய்யின் அரசியலை கடுமையாக குற்றம் சாட்டினார். “முதலமைச்சர் அவ்வளவு பண்பா பேசுறார். நீ மறுபடியும் தூண்டிவிடுற மாதிரி பேசுற… அரசியலில் விஜய் மாதிரி ஒரு அயோக்கியன் என கிடையாது” என்று கூறியிருந்தார் கரு.பழனியப்பன்.”நல்ல வேளை ரஜினியை போல ஆன்மிக அரசியல் பேசல” என்று நக்கல் அடித்துள்ளார். “செந்தில் பாலாஜியில் கால் தூசிக்கு வருவீங்களாடா நீங்க..?” என விஜய் கட்சியினரை ஒருமையில் பேசினார் கரு.பழனியப்பன். தற்போது இதனால், விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கொந்தளித்துள்ளனர்