ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகள் வைத்திருக்க சில நன்மைகள் உள்ளன. பல்வேறு கார்டுகளின் ரிவார்டுகள், கேஷ்பேக், சிறப்பு நன்மைகள் உங்கள் செலவுக்கு உதவும். மேலும், பல கார்டுகள் வைத்திருக்க உங்கள் மொத்த கடன் வரம்பும் அதிகரித்து, கிரெடிட் ஸ்கோர் மேம்பட வாய்ப்பு உண்டு.
அதே நேரத்தில் அதிகமான கார்டுகளால் செலவின கட்டுப்பாடு இழக்கப்படும் ஆபத்தும் இருக்கிறது. பேமென்ட்களை தவறவிட்டால், கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்பட்டு, கூடுதல் வட்டி மற்றும் அபராதங்கள் ஏற்படும்.
கார்டுகளை தேர்வு செய்யும்போது, உங்கள் வாழ்க்கை முறைக்கும் செலவு போக்குக்கும் பொருத்தமானதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். மேலும், தேவைக்கு மிஞ்சிய கார்டுகளை எடுப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
பொருளாதார திட்டமிடுபவர்கள் பொதுவாக பெரும்பாலான நபர்களுக்கு 2 அல்லது 3 கார்டுகள் போதுமானது என்று கூறுகின்றனர்.