ஜிஎஸ்டி-யில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு, கடந்த 22-ம் தேதி முதல் புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டது.
அடுத்த மாதம் தீபாவளிப் பண்டிகை வருவதால், இப்போதிலிருந்தே ஆடைகளை வாங்க, ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது.
இந்நிலையில் 2,500 ரூபாய்க்கு மேல் பில் வந்தால், அதை பிரித்துப் போடும்படியும், இல்லையென்றால் ஜிஎஸ்டி அதிகமாகிவிடும் என்றும் ஒரு குறுந்தகவல் சில நாட்களாக வைரலாகி வருகிறது.
உண்மை என்னவென்றால், ஒரு ஆடையின் விலை மட்டும் 2,500 ரூபாய்க்கு மேல் இருந்தால், அந்த ஆடைக்கு மட்டும்தான் ஜிஎஸ்டி 18 சதவீதமாக போடப்படும் என்றும், அதற்கு கீழ் விலை உள்ள துணிகளை மொத்தமாக எவ்வளவு தொகைக்கு வாங்கினாலும், அதற்கு 12 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி போடப்படும் என்றும் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.