கோழி இறைச்சியை எண்ணெய்யில் பொரித்து தயாரிக்கப்படும் ‘பிரைடு சிக்கன்’ பலருக்கும் மிகவும் பிடித்த உணவாக உள்ளது. சிலர் அதை அடிக்கடி அல்லது தினமும் கூட சாப்பிடுகிறார்கள். ஆனால் இப்படியாக தொடர்ந்து ‘பிரைடு சிக்கன்’ சாப்பிட்டால் உடலில் சில பாதிப்புகள் ஏற்படும்.
இந்த வறுத்த கோழி இறைச்சியில் நிறைவுற்ற கொழுப்பு (Saturated fat) அதிகமாக இருக்கும். இதனை அடிக்கடி சாப்பிடும்போது உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மேலும் இதில் கலோரிகளும் அதிகம் இருப்பதால் தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் கலோரி அளவு வேகமாக அதிகரித்து, உடல் எடை கூடுவதற்கு காரணமாகும்.
தொடர்ச்சியாக ‘பிரைடு சிக்கன்’ சாப்பிடும் பழக்கம் நீடித்தால், காலப்போக்கில் உடல் பருமன், அதிக கொழுப்பு சேர்தல் மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கலாம்.
அதுமட்டுமல்லாமல், சர்க்கரை பானங்கள் மற்றும் நொறுக்குத்தீனிகளுடன் சேர்த்து வறுத்த கோழி இறைச்சி சாப்பிடுவதும் உடல்நலத்திற்கு நல்லதல்ல.
எப்படி சாப்பிடலாம்?
கோழி இறைச்சியை எண்ணெய்யில் வறுத்து சாப்பிடுவதற்குப் பதிலாக வேகவைத்தோ அல்லது நெருப்பில் சுட்டு ‘கிரில் சிக்கன்’ ஆக சாப்பிடுவது உடல்நலத்திற்கு சிறந்ததாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.)
