இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார், இந்திய அணிக்குள் மீண்டும் கம்பேக் கொடுக்க முடியாமல் திணறி வருகிறார்.
இந்நிலையில் மனம் திறந்திருக்கும் அவர், நான் எனது பந்து வீச்சை தொடர்ந்து ரசித்து வருகிறேன் எனவும், தனக்கு ஓய்வு பெறும் எண்ணம் துளியும் இல்லை எனவும் தெரிவித்திருக்கிறார். அதே சமயம் தான் இந்திய அணிக்கு திரும்புவது தேர்வாளர்கள் கையில்தான் உள்ளது எனவும் கூறியுள்ளார்.