தகவல் தொழில் நுட்பத்தில் ஏஐ உருவாக்கிய புதிய மாற்றங்கள் பல துறைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மருத்துவம், கல்வி, மென்பொருள் போன்ற பல துறைகளில் ஏஐ டூல்கள் வேலையை வேகமாக முடிப்பதால், வேலைவாய்ப்பு குறையும் அபாயம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சாட்ஜிபிடி உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைவர் சாம் ஆல்ட்மன் சமீபத்தில் முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது ஏஐ வேகமாக வளர்வதால், அதை தவறாக பயன்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதன் மூலம், அடையாள திருட்டு, இணைய மோசடி, போலி செய்திகள் போன்ற விஷயங்கள் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. இவற்றை கட்டுப்படுத்த அரசு, தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.