10, 12 ஆம் வகுப்புகளில் தொகுதிவாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை ஜூன் 17 ஆம் தேதி சென்னை நீலாங்கரையில் நடிகர் விஜய் சந்தித்து பாராட்டினார்.
நடிகர்களாக இருந்து அரசியலுக்கு வருவோர் இந்தியா மட்டும் அல்ல உலகளவிலும் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வாறு வரும் போது திரைத் துறையை போன்று ஜொலிக்கிறார்களா என்பதுதான் விஷயமே. எம்ஜிஆர், ஜெயலலிதா, என்டிஆர் என நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. இவர்கள் திரைத்துறையை போல் அரசியலிலும் பிரகாசமாக விளங்கினர். மாநில முதல்வர்களாக இருந்து மக்களுக்கு சேவையாற்றியுள்ளனர்.
அந்த வகையில் கமல்ஹாசனும் தற்போது அரசியலுக்கு வந்துள்ளார். அவரது கட்சி இன்னும் ஒரு முறை கூட எந்த தேர்தலிலும் வெல்லவிட்டாலும் கமலுக்கென ஒரு வாக்கு வங்கி இருப்பதை மறுக்க முடியாது. அது போல் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் 2021 சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் களம் காண்பார் என எதிர்பார்க்கப்பட்டது.