Wednesday, January 14, 2026

ராணுவ நடவடிக்கையை சந்திக்க நேரிடும்., ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக அரசு மற்றும் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமெனிக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. போராட்டங்களை அடக்க பாதுகாப்பு படைகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் ஈரானின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.

போராட்டங்கள் பரவுவதைத் தடுக்க செல்போன் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இருப்பினும் போராட்டங்கள் கட்டுப்படுத்தப்படவில்லை. போராட்டமும் வன்முறைகளும் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,571ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 2,403 பேர் போராட்டக்காரர்கள், 147 பேர் அரசுத் தொடர்புடையவர்கள் என்று ஈரானிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் 18,100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினால் ஈரான் விவகாரத்தில் தலையிடுவோம், ராணுவ நடவடிக்கை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஈரானில் போராடும் மக்களுக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

Related News

Latest News